Blog
Fathih Institute > Blog > Uncategorized > 2023 ஆம் ஆண்டுக்கான CULTURAL FORUM நிகழ்ச்சிகளின் இறுதி நிகழ்ச்சி.
2023 ஆம் ஆண்டுக்கான CULTURAL FORUM நிகழ்ச்சிகளின் இறுதி நிகழ்ச்சி.
- November 8, 2023
- Posted by: [email protected]
- Category: Uncategorized
No Comments
2023 ஆம் ஆண்டுக்கான CULTURAL FORUM நிகழ்ச்சிகளின் இறுதி நிகழ்ச்சி உயர்கல்விக்கான பாதிஹ் நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.எம். நயீம் ( PhD) தலைமையில் பாதிஹ் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.
இதில் பல்வேறு வகையில் திறமைகளை வெளிப்படுத்திய அணிகளுக்கான பணப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூறாமித் அவர்களும் கெளரவ அதிதியாக ஹிமா பெளன்டேசன் அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் நூருல்லாஹ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
கெளரவ அதிதிகளாக உயர்கல்விக்கான பாதிஹ் நிறுவனத்தின் முகாமைத்துவ சபைத் தலைவர் ருவைஸ் ஹாஜியார், திஹாரிய அல்-அஸ்ஹர் பாடசாலையின் அதிபர் A.J.M. புர்கான் (SLPS), பட்டயக் கணக்காளரும் பாதிஹ் முகாமைத்துவ சபையின் முன்னாள் உறுப்பினருமான சிராஜ் ஸகரிய்யா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியையும் அவர்கள் பார்வையிட்டனர். ‘இறைதூதரே எமது முன்மாதிரி’ என்ற என்ற தலைப்பில் இவ்வருட Cultural Forum இடம்பெற்றது.